(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் பெறானாய்த் தன் புதல்வனொடு சென்றால் மனைவி சினங்கொள்ளாளென்னுங் கருத்தால் அங்ஙனமே கொண்டுபுகுதலும் அதனையறிந்து தலைவி ஊடல்நீடுதலை உடன்வந்த பாணனை நெருங்கி யானும் புதல்வனுமாக அடைந்த வழியும் அவள் வெகுண்டு "நீ யாவனடா" என்றிகந்து நின்றது நகையாகின்றது ஆதலின், யாம் நகுவோம் வாராயென அவள் ஊடல் தணியும்படி கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும், தானவட் பிழைத்த பருவத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| நகுகம் வாராய் பாண பகுவாய் |
| அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில் |
| தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் |