பக்கம் எண் :


427


  
     திணை : நெய்தல்.

     துறை : இது, வரைவிடை மெலிந்தது.

     (து - ம்.)என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் வரைவிடை வைத்துச் சென்றான் நீட்டித்தலும் வருந்திய தலைவி, முன்பு நமது சேரியில் அலரெழுந்தமையால் அதுபொறாத கொண்கனது தேர் தடுக்கவும் நில்லாது சென்றுவிட்டதன்றோ? ஆதலின் அவன் மீண்டுவந்து வரைவது முளதாமோ என அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் .................... தானே கூறுங் காலமு முளவே" (தொல். கள. 21) என்னும்" விதி கொள்க.

    
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை 
    
நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும் 
    
வெள்ளி அன்ன விளங்கிணர் நாப்பண் 
    
பொன்னின் அன்ன நறுந்தா துதிரப் 
5
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல் 
    
வரிவண் டூதலிற் புலிசெத்து வெரீஇப் 
    
பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத் 
    
தாங்கவுந் தகைவரை நில்லா ஆங்கண் 
    
மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி 
10
அம்பல் மூதூர் அலரெழச் 
    
சென்றது அன்றோ கொண்கன் தேரே. 

     (சொ - ள்.) இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும் - இரும்புபோன்ற கரிய கிளையையுடைய புன்னை நீலம் போன்ற பசிய இலையிடமெங்கும்; வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந்தாது உதிர - வெள்ளிபோன்ற விளங்கிய பூங்கொத்தினிடை உள்ள பொன்போன்ற நறிய மகரந்தம் உதிராநிற்ப; புலிப்பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் வரி வண்டு ஊதலின் - புலியினது புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரியமைந்த வண்டுகள் ஊதுதலினாலே; புலிசெத்து வெரீஇத் தாங்கவும் தகை வரை ஆங்கண் நில்லா - இது புலி யோசையோ வென்று அயிர்த்து அச்சமுற்றுப் பல முறை இழுத்து நிறுத்தவும் நிறுத்திய இடத்தில் நில்லாவாகி; பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ - தேரிற்பூட்டிய குதிரையினுடைய வயங்கிய கால்கள் பந்துபோலத் தாவாநிற்ப; மல்லல் அம் சேரி கல் எனத் தோன்றி அம்பல் மூதூர் அலர் எழ - வளப்ப