பக்கம் எண் :


430


    எங்காதலி என அருமையாக நலம் பாராட்டினமையும் உணர்க.

(250)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.

    (து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் ஒருசிறைப் புறத்தானாக வந்திருப்பதையறிந்த தோழி, தலைவியை இற்செறிப்பறிவுறுத்துவாள் தினையை நோக்கித் தினையே! யாம் நாடனை விரும்பியது காரணமாகவே நின்னைப் பாதுகாத்தலையும் நீ காண்பாய்; இப்பொழுது எம்மை இற்செறித்து அன்னை வெறியெடுத்ததனிமித்தம் நின்னைக் காப்பாரில்லாமையாலே, பறவைகள் நின் கதிரைக் கொண்டுபோய் விடுமாதலின் நீ இப்பொழுது விளையாமல் பிற்காலத்து விளைவாயாகவென நயந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்.................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
நெடுநீர் அருவிய கடும்பாட்டு ஆங்கண் 
    
பிணிமுதல் அரைய பெருங்கல் வாழைக் 
    
கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும் 
    
நன்மலை நாடனை நயவாய் யாமவன் 
5
அளிபேர் அன்பின் நின்குரல் ஓப்பி 
    
நின்புறங் காத்தலும் காண்போய் நீயென 
    
தளிரேர் மேனித் தொல்கவின் அழியப் 
    
பலிபெறு கடவுட் பேணிக் கலிசிறந்து 
    
தொடங்குநிலைப் பறவை உடங்குகுரல் கவருந் 
10
தோடிடங் கோடாய் கிளர்ந்து 
    
நீடினை விளைமோ வாழிய தினையே. 

     (சொ - ள்.) தினையே நெடுநீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் - தினையே! நெடிதாம் நீர்மையுடைய அருவியினது ஒலிமிக்க அவ்விடத்திலே; பிணிமுதல் அரைய பெருங்கல் வாழைக் கொழுமுதல் ஆய்கனி - பிணிப்புண்ட அடியையுடைய பெரிய மலையிடத்துண்டாகிய வாழையின் கொழுத்த அழகிய கனியை; மந்தி கவரும் நல் மலை நாடனை நயவாய் - மந்திகள் கவர்ந்து உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனை விரும்பி; யாம் அவன் அளி பேர் அன்பின் நின்குரல் ஓப்பி நின் புறங் காத்தலும் நீ காண்போய் - யாம் அவனது கருணைமிக்க அன்பினால் நின்னுடைய கதிர்களைக் கிளிகள் கொய்யாதபடி ஓப்பி நின்னைப்