(து - ம்.) என்பது, பகற்குறி வந்த தலைவனைத் தோழி நெருங்கிக் கொண்கனே! எம் தலைவியின் வளை கழல்வதனை அறிந்த அன்னை அவளை இல்வயிற் செறித்து ஓம்புவளாயினள்; இங்கு யான் தமியேனாய் வந்து போகின்றேன்' என வரைவு தோன்ற உரையாடா நிற்பது.
(இ - ம்.) இதுவுமது.
| பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் |
| செல்வல் கொண்க செறித்தனள் யாயே |
| கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் |
| திருவுடை வியனகர் வருவிருந்து அயர்மார் |
5 | பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த |
| கொக்குகிர் நிமிரல் மாந்தி எற்பட |