பக்கம் எண் :


446


    (பெரு - ரை.) மறந்து அமைகலன் என்றது மறவேனாயினேன் நின்புன்மையை ஒருவாறு பொறுத்துக் கொள்கின்றேன் என்பது குறிப்பெச்சமாகலின் ஊடல் தீர்வது குறிப்பாயிற் றென்க.

(260)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : (1) இது, சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவுகடாயது.

    (து - ம்.) என்பது, தலைவன் சிறைப்புறமாக வந்திருப்பதை அறிந்த தோழி தலைவியை நோக்கி 'இத்தகைய கொடிய சிறிய நெறியில் நம் தலைவர் இருளில் வருதலால், அவர் நம்பால் அருளிலராவ'ரென இரவுக்குறி விலக்கி வரைவுகடாயது

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

    துறை : (2) தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம்.

    (து - ம்.) என்பது, தலைவி வரைதல் வேட்கையளாய் மொழிந்தது கேட்ட தோழி தலைமகனை இகழ்ந்து கூறுதலும் அதுபொறாது தலைமகள் நொந்து 'அவர் வரைந்து கொள்ளாது இருளில் வருதலால் நம்பால் அருளிலராயினும் நாம் இறந்துபடுவது கருதி அன்பின் வருதலால், அவர் நீடுவாழ்வாராக' என இயற்படக் கூறாநிற்பதுமாம்.

    (இ - ம்.) இதற்கு,

  
"வரைதல் வேண்டித் தோழி செப்பிய 
  
 புரைதீர் கிளவி புல்லிய எதிரும்" (தொல். கள. 16) 

என்னும் விதிகொள்க.

    
அருளிலர் வாழி தோழி மின்னுவசிபு  
    
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு 
    
வெஞ்சுடர் கரந்த கமஞ்சூல் வானம் 
    
நெடும்பெருங் குன்றத்துக் குறும்பல மறுகித் 
5
தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்துக் 
    
களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் 
    
வெளிறில் காழ்மரம் பிணித்து நனிமிளிர்க்கும் 
    
சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை 
    
எருவை நறும்பூ நீடிய 
10
பெருவரைச் சிறுநெறி வருத லானே. 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும்