(து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரிகின்றா னென்பது உணர்ந்த தலைமகள் வருந்துதலும் அதனை யறிந்த தலைவன் 'இத்தகையாளை விட்டுப் பிரிவேன் என்று என்நெஞ்சு கருதுமாயின், இன்மையதிளிவு மிகக் கொடி'தென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர் |
| ஆடுமயில் பீலியின் வாடையொடு துயல்வர |
| உறைமயக் குற்ற ஊர்துஞ்சு யாமத்து |
| நடுங்குபிணி நலிய நல்லெழில் சாஅய்த் |
5 | துனிகூர் மனத்தள் முனிபடர் உழக்கும் |
| பணைத்தோள் அரும்பிய சுணங்கிற் கணைக்கால் |
| குவளை நாறுங் கூந்தல் தேமொழி |
| இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பப் |
| பிரிவின்நெஞ் சென்னும் ஆயின் |
10 | அரிதுமன் றம்ம இன்மையது இளிவே. |
(சொ - ள்.) தண் புனக் கருவிளைக் கண்போல் மாமலர் - ஈரிய புனத்திலுள்ள கருங்காக்கணத்தின் கண்போன்ற கரிய மலர;் வாடையொடு ஆடுமயில் பீலியின் துயல்வர - வாடைக்காற்று வீசுதலானே கூத்தாடுகின்ற மயிலின் பீலிபோல ஆடாநிற்ப; உறைமயக்கு உற்ற ஊர் துஞ்சு யாமத்து - விடாது மழைத்தூவல் பொருந்திய ஊர் முழுதும் உறங்கும் நடுயாமத்து; நடுங்கு பிணி நலிய நல்எழில் சாஅய் துனி கூர் மனத்தள் - நடுங்குகின்ற காமநோய் வருத்தஞ் செய்தலாலே நல்ல அழகு குறைந்து; முனிபடர் உழக்கும் - துன்பமிக்க மனத்தளாய்த் தன்னை முனிந்தொறுக்கும் காமநோயால் உழக்(கப்படு)கின்ற; பணைத்தோள் அரும்பிய சுணங்கின் கணைக்கால் குவளை நாறும் கூந்தல் தேமொழி இவளின் - பருத்த தோளையும் வெளிப்படத் தோன்றிய தேமலையும் திரண்ட தண்டையுடைய குவளைமலர் மணம் வீசுங்கூந்தலையும் இனிய சொல்லையுமுடைய இவளை; தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப - கைவிட்டும் பொருளின் முயற்சி என்னெஞ்சினை இழுத்தலால்; நெஞ்சு பிரிவின் என்னும் - என்னெஞ்சு 'யான் இவளைப் பிரிகிற்பேன்' என்று கூறாநிற்கும்; ஆயின் இன்மையது