(து - ம்.) என்பது, தலைமகன் ஒருசிறைப்புறமாக வந்திருப்பதை யறிந்த தோழி தலைவியை நோக்கி அவர் நம்பால் வந்துபோகின்ற களவொழுக்கத்தால் அடைந்த அலர் முதலாயவற்றை நாணத்தினால் நாம் நேரே கூறாவிடினும் நம்முடைய கண்ணீரே அவரறியும்படி உரை செய்துவிடுகின்றனவென்று அழிந்துகூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.
| பிறைவனப்பு இழந்த நுதலும் யாழநின் |
| இறைவரை நில்லா வளையும் மறையாது |
| ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு |
| உரையவற்கு உரையாம் ஆயினும் இரைவேட்டுக் |
5 | கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது |
| கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு |
| முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும் |