(து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற் செல்லக் கருதியதறிந்த தோழி, அவன் கவலையில்லாது சென்று வினைமுடித்து வருதல் கருதி அவனை நெருங்கி ஐயனே, எம்மை இங்கு நீங்கி வினைவயினேகுவிராயின், யாம் வருந்தாது சீறூரின்கண்ணே உறைவோம்: நல்ல குடியிலே பிறந்தாரைத் தனி வைத்த காலை வருந்துதல் அவர்க்கியல்பன்றென உடன்பட்டுக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாலமைத்துக் கொள்க.
துறை : (2) கடிநகர் வரைப்பிற் கண்டுமகிழ்ந்த தலைமகற்குத் தோழி நும்மாலே யாயிற்றென்று சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, தலைமகன் அந்தணர் சான்றோர் அருங்கல முன்னிட்டு மனையகம் புகுந்து தோழியைக் கண்டானுக்கு அவள் நீயிர் வரைவிடை வைத்துப் பிரியுங்காலை யாம் வருந்தாதிருந்ததன்றி இம் மணவினையை முயன்றேமில்லை, இது நும் முயற்சியானன்றோ நிகழ்ந்ததென மகிழ்ந்து கூறாநிற்பதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதனை, "நாற்றமும் தோற்றமும்" (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண் 'நாலெட்டு வகையும் தாங்கருஞ் சிறப்பிற்றோழி மேன' என்புழித் தாங்கருஞ் சிறப்பு என்ற விதப்பால் கொள்க.
| கொல்லைக் கோவலர் குறும்புனஞ் சேர்ந்த |
| குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ |
| ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் |
| அகலுள் ஆங்கண் சீறூ ரேமே |
5 | அதுவே சாலுவ காமம் அன்றியும் |
| எம்விட்டு அகறிர் ஆயின் கொன்னொன்று |