பக்கம் எண் :


456


     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவியை வேற்றுமைகண்டு இல்வயிற் செறித்தகாலத்துக் காமமிகுதிப்பட்டு வருந்துந் தலைவியை ஆற்றப் புகுந்த தோழி, தலைவன் சிறைப்புறத்தானாதலையறிந்து அவன் கேட்குமாற்றானே கானலில் என்றும் வாராத யான் ஒருநாள்வந்து ஆண்டுப் புள்ளொலிக் குரலைத் தலைவனது தேர்க்குரலோவென்றவுடன் அவன் அங்கு வந்துவிட்டனன்: இப்பொழுது அங்ஙனமும் தலைப்பெய்யாதபடி காவல் செய்யப்பட்டாயிற்று என்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்குக், "காப்பின் கடுமை கையற வரினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

     துறை : (2) வரைவுகடாயதூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (மேற்படி) என்பதனாற் கொள்க.

    
நொச்சி மாஅரும் பன்ன கண்ண 
    
எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி 
    
இலங்கெயிற்று ஏஎர் இன்நகை மகளிர் 
    
உணங்குதினை துழவும் கைபோன் ஞாழல் 
5
மணங்கமழ் நறுவீ வரிக்குந் துறைவன் 
    
தன்னொடு புணர்த்த இன்னமர் கானல்  
    
தனியே வருதல் நனிபுலம் புடைத்தென 
    
வாரேன் மன்யான் வந்தனென் தெய்ய 
    
சிறுநா வொண்மணித் தெள்ளிசை கடுப்ப 
5
இனமீன் ஆர்கை ஈண்டுபுள் ஒலிக்குரல் 
    
இவைமகன் என்னா அளவை 
    
வயமான் தோன்றல் வந்துநின் றனனே. 

     (சொ - ள்.) நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி - நொச்சியின் கரிய அரும்பு போன்ற கண்ணையுடைய மணலால் ஆகிய எக்கரின்கண் உள்ள பெரிய சுற்றத்தையுடைய ஞெண்டின் கூட்டம;் இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் உணங்குதினை துழவும் கைபோல் ஞாழல் மணங்கமழ் நறுவீ வரிக்கும் துறைவன் தன்னொடு - விளங்கிய பற்களின் அழகிய இனிய நகையையுடைய மாதர்கள்