பக்கம் எண் :


473


அரிதே என இரவுக் குறியும் மறுத்தாளாயிற் றென்க. 'காடு தேர்ந்து அசைஇய' என்றும் பாடம். இதுவே சிறந்த பாடமுமாம்.

(276)
  
     திணை : பாலை.

     துறை : இது, 'பட்டபின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய' ஆற்றாளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, அறத்தொடு நிற்றலின்பின் மணஞ்செய்துகொள்ளாது பொருள் ஈட்டுதற்குத் தலைவன் வேற்று நாட்டுச் சென்றதனால் தலைமகள் வருந்தி வண்டை நோக்கி, "வண்டே! கொடியை; நீ கூடிமுயங்குவது போல எம்மை முயங்குமாறு செய்திலை; நின்நெஞ்சுங் கரியதேயோ? இந்நோயால் இன்றே யான் மடிகின்றேன்; நீ நீடுவாழ்தி"யென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.

    
கொடியை வாழி தும்பி இந்நோய் 
    
படுகதில் அம்ம யான்நினக்கு உரைத்தென 
    
மெய்யே கருமை அன்றியுஞ் செவ்வன் 
    
அறிவுங் கரிதோ அறனிலோய் நினக்கே 
5
மனையுறக் காக்கும் மாண்பெருங் கிடக்கை  
    
நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய 
    
தாறுபடு பீரம் ஊதி வேறுபட 
    
நாற்றம் இன்மையிற் பசலை ஊதாய் 
    
சிறுகுறும் பறவைக் கோடி விரைவுடன் 
10
நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ அன்பிலர் 
    
வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு 
    
என்நிலை உரையாய் சென்றவண் வரவே. 

     (சொ - ள்.) தும்பி அறன் இலோய் கொடியை மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண்முள்வேலி - வண்டே! அறநெறியிலே செல்லாதோய் நீ மிக்க கொடியை நமது மாளிகையைப் பொருந்தக் காவலாயிருக்கும் மாட்சிமைப் படப் பெரியதாக அமைக்கப்பட்ட நுண்ணிய முட்களையுடைய வேலியிலே படர்ந்து; தாதொடு பொதுளிய தாறுபடு பீரம் ஊதி - தேனொடு தழைந்த குலைகட்டிய பீர்க்கம்பூவிலே சென்று தேனைப் பருகி; வேறுபட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் - அதற்கு மாறாக நறுநாற்றமில்லாமையினாலே என் பசலையிடத்து முரன்றாயும்