(து - ம்.) என்பது, களவொழுக்கம் மேற்கொண்ட தலைமகன் மறைவாகிய ஓரிடத்தில் வந்திருப்பதனைக் குறிப்பாலறிந்த தோழி தலைவியை இல்வயிற் செறித்தமை அறிவுறுத்தி வரைந்தெய்துமாறு உடன்படுத்துகின்றாள். தலைவியை நெருங்கி 'நீ கொண்ட இந்நோய் காதலனாலே தரப்பட்ட தென்பதை யறியாத அன்னை வெறியெடுத்தலின் ஆங்கெய்திய வேலன் வார்த்தையால் இது தணியுமாயினோ மிக நன்று, அது கழிந்தது; இனி வெற்பன்பாலுற்ற நமது தொடர்பு கழிந்தது போலு'மென்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| தோடமை செறிப்பின் இலங்குவளை ஞெகிழக் |
| கோடேந்து அல்குல் அவ்வரி வாட |
| நன்னுதல் பாய படர்மலி அருநோய் |
| காதலன் தந்தமை அறியா துணர்த்த |
5 | வணங்குறு கழங்கின் முதுவாய் வேலன் |
| கிளவியின் தணியின் நன்றுமன் சாரல் |
| அகில்சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை |
| ஆடுமழை மங்குலின் மறைக்கும் |
| நாடுகெழு வெற்பனொடு அமைந்தநம் தொடர்பே. |
(சொ - ள்.) தோடு அமை செறிப்பின் இலங்கு வளை நெகிழக்கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட நல் நுதல் பாய படர்மலி அரு நோய் - தொகுதியாக அமைத்துச் செறித்தலையுடைய இலங்குகின்ற வளைகள் நெகிழ்ச்சியுறப் பக்கம் உயர்ந்த அல்குலினுடைய அழகிய வரிகள் வாட்டமடைய நல்ல நுதலின்கண்ணே பசலைபாயக் கவலைமிக்க நீங்குதல் அரிய நோயானது; காதலன் தந்தமை அறியாது உணர்த்த - நங் காதலனாலே தரப்பட்டதென்பதை அறியாது நம் அன்னை படிமத்தானுக்கு இவள் படும் நோயின் காரணம் தெரியவேண்டும் என்றறிவிப்ப; முதுவாய் வேலன் அணங்குஉறு கழங்கின் - அந்த அறிவு வாய்ந்த வேலன் வெறிக்களத்து முருகவேளின் முன்பு இடப்பட்ட சுழற்சிக் கொட்டையைக் கொண்டு ஆராய்ந்து; கிளவியின் தணியின் நன்றுமன் - முருகணங்கென்று அம் முருகவேளைத் துதித்தலாலே தணியப்படுமாயின் அது மிக நல்லதேயாம்; அங்ஙனம் வெறியுமெடுக்காது இல்வயிற் செறிக்கப்பட்டமையால்; சாரல் அகி்ல் சுடு கானவன் உவல் சுடு கமழ்புகை ஆடு மழை மங்குலின் மறைக்கும் நாடுகெழு வெற்பனொடு - இனிச் சாரலின்கண்ணே அகிலைத் தீயிட்டுக் கொளுத்துங் கானவன் ஆங்குள்ள சருகில் முதலிலே தீயிடுதலானே நறுமணம் வீசுகின்ற புகையானது