(து - ம்.) என்பது, களவொழுக்கத்தே பகற்குறிவந்த தலைமகனை எதிர்கண்ட தோழி உன்சொல்லை மெய்யென்று கொண்ட இவளழகு கெடும்படி நீ இங்ஙனம் நீட்டித்துவருவது தகுமோவெனவும், உள்ளுறையால் வரைந்து எய்துகவெனவுஞ் சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் முற்செய்யுட்கோதிய இலக்கணமேயாம்.
துறை : (2) கடிநகர் புக்க தோழி பிற்றைஞான்று வேறுபடாது ஆற்றனாயென்று சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, அருங்கலந் தந்து வரைந்துகொண்டு மனைவியொடு காதலன் தன்நகர் புகுந்தபின்பு இறைவியின் இல்லறநெறியை அறியுமாறு செவிலியோடு தோழி தலைமகனது மாளிகையிலே சென்று அவனை நெருங்கி நீ காதலி வேறுபாடுறாது மணந்து நன்காற்றினாயென்று மகிழ்ந்து கூறாநிற்பதும் ஆகும்.
(இ - ம்.) இதற்கு, "அற்றம் அழிவு உரைப்பினும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.
| ஒண்ணுதல் மகளிர் ஓங்குகழிக் குற்ற |
| கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல் |
| அகல்வரிச் சிறுமனை அணியுந் துறைவ |