பக்கம் எண் :


484


    
வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய 
5
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்குதிரை 
    
முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி  
    
ஏமுற விளங்கிய சுடரினும் 
    
வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே. 

    (சொ - ள்.) ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக்குற்ற கண்நேர் ஒப்பின் கமழ் நறு நெய்தல் - ஒள்ளிய நெற்றியையுடைய நுளைச்சியர் அகன்ற கழியின்கண்ணே பறித்துவந்த மகளிர் கண்ணை நேராக ஒத்தலையுடைய மணங்கமழ்கின்ற நறிய நெய்தன் மலர்; அகல் வரிச் சிறுமனை அணியுந்துறைவ - அகன்ற கையாலே கோலஞ்செய்த சிறிய மனையை அலங்கரிக்குந் துறையையுடைய தலைவனே!; ஓங்குதிரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏம்உற விளங்கிய சுடரினும் வாய்மை சான்ற - உயர்ந்து வரும் அலையையுடைய கடலின்மீது பலருந் தொழுமாறு தோன்றி யாவரும் மகிழ விளங்கிய ஞாயிற்றினுங் காட்டில் வாய்மை விளங்கிய; நின் சொல் நயந்தோர்க்கு - நினது சொல்லை விரும்பிய எம்மிடத்துள்ள; வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய - அறிவுடையோரால் ஆராய்ந்து கண்ட பழைய அழகு கெடும்படியாக; இன்னை ஆகுதல் தகுமோ - நீ இத் தன்மையை உடையையாயிருத்தல் தகுதியுடையதொரு காரியமாகுமோ? ஆதலின் ஆராய்ந்து ஒன்றனைச் செய்வாயாக!; எ - று.

    (வி - ம்.) தவிராது தோன்றி விளங்குதலின் ஞாயிற்றை உவமித்தார். சொல் நயந்தோர்: இடவழுவமைதி.வரைந்தெய்தாது இங்ஙனம் நீட்டித்து அருகிவருஞ் செய்கையை என்னும் பொருள்பட இன்னையென்றாள். புகல்புக்கார்மாட்டு வாய்மை பிறழின் மிக்க ஏதமெய்துமேயென்று குறிப்பித்தாளுமாம்.

    உள்ளுறை :- மகளிர் கொய்துவந்த நெய்தல் சிறுமனையை அணி செய்யுமென்றது. இவளை மணந்து சென்று நினது இல்லத்தை அணி பெறச் செய்யென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

    (2) உரை:- துறைவனே, தொல்கவின் தொலையுமாறு இப்படி வரைந்துகொள்ளாது களவினொழுகியது தகுதியாகுமோ வென்றவாறு.

    உள்ளுறை :- நெய்தல்மலர் சிறுமனையை அழகு செய்தல்போல இவளே நின் இல்லத்துக்கு அழகமைந்தவளென்பது. மெய்ப்பாடு - உவகை; பயன் - மகிழ்தல். இப் பாட்டுச் சிறுமைக்குக் கூறிய ஒன்பதடியினுங் குறைந்துளது; முதலடியில்லை போலும்.

    (பெரு - ரை.) நின் சொல் நயந்தோராகிய எமக்கு நீ எம் நலம் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ? என்றியைத்தலே நேரிதாம்.

(283)