(து - ம்.) என்பது, தலைமகன் பிரிதலைத் தோழியாலறிந்த தலைவி அவளை நோக்கிக் 'கார்காலத்திலே நம் தலைவர் நம்மைப் பிரிந்து செல்வாராயினார்; நாம் அவரின்றி வருந்தி மனையின்க ணிருப்போ மாயினோம்; இஃதென்ன கொடுமை, இங்ஙனம் பிரிந்தால் இனி யாதாய் முடியுமோ' வென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை. . . . ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதனாற் கொள்க.
| என்னா வதுகொல் தோழி மன்னர் |
| வினைவல் யானைப் புகர்முகத்து அணிந்த |
| பொன்செய் ஓடை புனைநலங் கடுப்பப் |