(து - ம்.) என்பது, தோழி தலைமகனை நெருங்கி 'எம் தலைவியின் களவொழுக்கத்தினை அன்னை யறிந்து அவளை இல்வயிற் செறித்தனள்; இனிக் களவின் இயலாமையால், யாம் எந்நலனழியச் செல்லாநிற்பேம்; நீ வாழிய'வென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
துறை :(2) சிறைப்புறமுமாம்.
(து - ம்.) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்பக் கூறியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதுவுமது.
| முரிந்த சிலம்பி னெரிந்த வள்ளியின் |
| புறனழிந்து ஒலிவருந் தாழிருங் கூந்தல் |
| ஆயமும் அழுங்கின்று யாயுமஃ தறிந்தனள் |
| அருங்கடி அயர்ந்தனள் காப்பே எந்தை |
5 | வேறுபல் நாட்டிற் கால்தர வந்த |
| பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக் |
| கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம் |
| இளநலம் இற்கடை ஒழியச் |
| சேறும் வாழியோ முதிர்கம் யாமே. |
(சொ - ள்.) முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் - தலைசரிந்த மலைப்பக்கத்தில் முதலொடு கருகிய வள்ளிக் கொடிபோல; புறன் அழிந்து ஒலிவருந் தாழ் இருங் கூந்தல் ஆயமும் அழுங்கின்று - மேலின் அழகெல்லாம் அழிந்து தழைந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடைய தோழியர் குழாமும் வருந்தி அழுங்கா நின்றது; அது யாயும் அறிந்தனள் அருங்கடி அயர்ந்தனள் காப்பு - அக் களவொழுக்கத்தை அன்னையும் அறிந்தனளாகி இல்வயிற் செறித்து அரிய காவல் செய்வாளாயினள்!; வேறு பல் நாட்டின் கால் தர வந்த எந்தை பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறை - ஆதலின் வேறாகிய பலபல தேயங்களினின்றுங் காற்றுச் செலுத்துதலால் வந்த எந்தையினுடைய பலவாய தொழிலின் பொலிவு பெற்ற கலங்கள் ஓங்கித் தோன்றும் பெரிய துறையின் கண்ணே; மடைக்கலி கள்ளின் சாடி அன்ன எம் இளநலம் - வைத்துடைய உண்ணுதலால் செருக்குமிகுகின்ற கள்ளின் சாடி