பக்கம் எண் :


5o1


5
1 தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினைஇக் 
    
கொன்ற யானைக் கோடுகண்டு அன்ன 
    
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள் 
    
சிலம்புடன் கமழுஞ் சாரல் 
    
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே. 

    (சொ - ள்.) தோழி வேய் பயின்று எருவை நீடிய பெருவரை அகந்தொறும் - தோழீ! மூங்கில் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவிய மலையிடமெல்லாம்; தொன்று உறைதுப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்றயானைக் கோடு கண்டு அன்ன - பழைமையாயுற்ற அறிவுடனே வலிமையும் மிகுதலாலே சினங்கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற்போன்ற; செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் - செவ்விய புறத்தையுடைய கொழுவிய அரும்பவிழ்ந்த காந்தள்; சிலம்புடன் கமழும் சாரல் இலங்கும் மலை நாடன் - சிலம்பிடம் எல்லாம் மணங்கமழும் சாரலையுடைய இலங்குகின்ற மலைநாடனது; மலர்ந்த மார்பு - அகன்ற மார்பானது; தீயும் வளியும் விசும்பு பயந்த ஆங்கு - ஆற்றற்கரிய தீயையும் ஆற்றுதற்கினிய காற்றையும் ஆகாயந்தான் பெற்றது போலக் களவுக்காலத்து அணித்தாகி எப்பொழுதும் இல்லாமையால்; நோயும் இன்பமும் ஆகின்று - நோய் செய்யும் தன்மையும்; இப்பொழுது வரைந்து கொண்டு களவுக் கை நெகிழாது அணைத்து முயங்கியிருத்தலானே இன்பமாந் தன்மையுமாகி யிராநின்றது; மாயம் அன்று - இது பொய்ம்மை யெனப் படுவதன்று; மெய்ம்மையே யாகும்; எ - று.

    (வி - ம்.) அகந்தொறும் அவிழ்ந்த காந்தளென்க. புலியின் இரத்தந் தோய்ந்த கோடாதலின் செம்முகைக்கு உவமித்தார். இது, நலன் நிலைக்களமாகச் சினையொடு சினைவந்த உருவுவமம். பிரிந்துறையும் பொழுது தீயாலே தெறப்படுவதுபோலத் தலைவி வருந்துதலின் மார்பு தீயொத்த நோயைப் பயந்ததெனவும் வரைந்து பிரியா துறையும்பொழுது அவ் வெப்பந் தீரக் காற்றுவீசி இன்பஞ் செய்வதுபோல மார்பு காற்றொத்த இன்பத்தைப் பயந்தது எனவுங் கூறினாளாயிற்று. இது, மறைந்தவை யுரைத்தல்.

    உள்ளுறை :- காந்தள் சிலம்பிடமெங்குங் கமழுமென்றது; தலைவனது அன்பு தலைவியின் இல்லகத்தார் யார்க்கும் மகிழ்ச்சி யளிக்கின்ற தென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

    (பெரு - ரை.) 'துப்பொடு முரண்மிக', என்பதற்கு வலிமையோடு மாறுபாடும் மிகுதலால் என்னல் நேரிதாம். இன்பமும் துன்பமும் தோன்றுதற்கு ஒரு பொருளே காரணமாதற்குத் 'தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு' எனவரும் உவமை ஆற்றவும் இனிதாதல் உணர்க. மாயம் - பொய். 'தொண்டுறை' என்றும் பாடம்.

(2")
  
 (பாடம்) 1. 
தொண்டுறை.