(து - ம்.) என்பது, கொண்டுதலைக் கழிந்த தலைமகன் தன்னகம் புகுந்து தலைமகளை மணஞ் செய்துகொண்ட தறிந்த தோழி, அவன் மாளிகையின் கண்ணே சென்று தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து 'தலைவனது மார்பு முன்பு நோயும் பின்பு இன்பமுமா யிராநின்றது, இது பொய்ம்மை யன்'றென மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) "பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்ததெறற்கரு மரபின் சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு |
| நோயும் இன்பமும் ஆகின்று மாதோ |
| மாயம் அன்று தோழி வேய்பயின்று |
| எருவை நீடிய பெருவரை அகந்தொறுந் |