பக்கம் எண் :


534


"நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே" (தொல். பொ. 44) என்ற விதிப்படிதானே கூறுவாளாகி முன்பு சுரத்தின்கண்ணே சென்ற காதலர்' முதிர்ந்தோர் இளமை யெய்தார், வாழ்நாளளவறிந்தாரில்லை ஆதலின் நின் கொங்கையைப் புல்லிக் கங்குல் கழியக்கடவது' என்று கூறி எம்மளவிலே பொய்த்தனர்; அதனால் அணங்கப்பெறாது வாழ்வாராக'வென்று அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே" (தொல். அகத். 44) என்னும் விதியாலமைத்துக் கொள்க.

    
முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார் 
    
வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை 
    
மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி 
    
நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பிற் 
5
குறும்பொறிக் கொண்ட கொம்மையம் புகர்ப்பிற் 
    
கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் 
    
கழிவ தாக கங்குல் என்றுதாம் 
    
மொழிவன் மையிற் பொய்த்தனர் வாழிய 
    
நொடிவிடு வன்ன காய்விடு கள்ளி 
10
அலங்கலம் பாவை ஏறிப் புலம்புகொள் 
    
புன்புறா வீழ்பெடைப் பயிரும் 
    
என்றூழ் நீளிடைச் சென்றிசி னோரே. 

     (சொ - ள்.) நொடி விடுவு அன்ன காய்விடு கள்ளி அலங்கல் பாவை ஏறி - நொடித்து விட்டாற் போன்ற காய்கள் ஒலியெழும்பத் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற பாவைபோன்ற கிளைகளிலேறி; புலம்பு கொள் புன் புறா வீழ் பெடைப் பயிரும் - தனியே இருத்தலைக்கொண்ட புல்லிய புறாவானது தான் விரும்பிய பெடையைப் புணர்ச்சிக் குறிப்பால் அழையா நிற்கும்; என்றூழ் நீள் இடைச் சென்றிசினோர் - வெயிலின் வெப்ப மாறாத நீண்டிருக்கின்ற சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்தாம்; முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார் - ஆயுள் முதிர்ந்து யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீண்டொருகாலத்து இளமைப் பருவத்தை விரும்பினாலும் தவறியேனும் அடைபவர் அல்லர்; வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை - தாம் வாழ்நாளின் வகையினளவை அறிபவருமில்லை; மாரி்ப் பித்திகத்து ஈர் இதழ் அலர் நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பின் -ஆதலால் மாரிக்காலத்து மலர்கின்ற சிறு சண்பகத்தின் ஈரிய இதழ்களையுடைய மலரை நறிய வயிரம் முற்றிய சந்தனத்தை அரைத்துப் பூசிய மேல் மாலையாக அணிந்த மார்பிலே; குறும் பொறிக்கொண்ட கொம்மை. அம் புகர்ப்பின் கருங்கண் வெம்முலை