பக்கம் எண் :


539


     (பெரு - ரை.) 'எயிறேர் பொழுதின் ஏய்தருவேம்' என்றும் 'தம்நசை' என்றும் பாடம். மலரின் மௌவல் காட்டி என்றதற்கு மலர் இல் மௌவல் காட்டி என்று கண்ணழித்துக்கொண்டு 'மலர் இல்லாத வறிய முல்லைக் கொடியைக் காட்டி' எனப் பொருள் கூறுதலே சிறப்பு. கனங்குழை : விளி.

(316)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி தலைமகனை வரைவுகடாயது.

     (து - ம்,) என்பது, தோழி வரையாது களவின் வழிவந் தொழுகுந் தலைமகனை நெருங்கி, மலைநாடனே! நீ விரும்பிய இவள்பால் வந்து போகுங் களவினை அன்னை அறிவாளேயாயின் இவள்கண் நீர்கலந்து சிவந்து வேறுபாடெய்தி எவ்வண்ணமாக முடியுமோவென அஞ்சி உரையாடுவாளாகி உள்ளுறையால் வரைந்துகொண்டு செல்வாயாகவெனவும் நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
நீடுஇருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த 
    
பூம்பொறி ஒருத்தல் ஏந்துகை கடுப்பத் 
    
தோடுதலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை 
    
பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் 
5
உயர்வரை நாடநீ நயந்தோள் கேண்மை 
    
அன்னை அறிகுவள் ஆயின் பனிகலந்து 
    
என்னா குவகொல் தானே எந்தை 
    
ஓங்குவரைச் சாரல் தீஞ்சுனை ஆடி 
    
ஆயமொடு குற்ற குவளை 
10
மாயிதழ் மாமலர் புரைஇய கண்ணே. 

     (சொ - ள்.) நீடு இருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப - நீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; தோடு தலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை - மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் உயர்வரை நாட - பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே!; நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள் ஆயின் - நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகிய