(து - ம்,) என்பது, களவொழுக்கத்துக் கொண்டுதலைக்கழிந்து தன்மனை வரைந்துகொண்ட தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் தோழிக் குணர்த்த அவள் 'ஐயனே! அன்று நாம் ஓமை நிழலிலிருக்கும் பொழுது களிற்றியானை பிளிற்றியதை வேறாக வுணர்ந்து பிடியானை புலம்பிய குரலை நினைத்தலுஞ் செய்வீரோ? அந் நெறியில் எங்ஙனஞ் செல்வீ''ரென்பாள் போன்று பிரிவினாலே தலைவிபடுந் துன்பத்தைக் குறிப்பித்து மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிரியுங் காலை எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| நினைத்தலும் நினைதிரோ ஐய அன்றுநாம் |
| 1 பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த |
(பாடம்) 1. | பனைத்தாள் ஓமை. |