பக்கம் எண் :


55


தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட்டதாக, அங்ஙனம் கவிழ்தலும்; கலங்கி உடன் வீழ்பு பலர் கொள் பலகை போல - கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து அவ்வழி விழுந்த பலரும் ஆண்டு மிதந்து வந்த ஒரு பலகையைப் பற்றிக்கொண்டு தாம் தாம் தனித்தனி இழுப்பதுபோல; வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலை - நின் கைகளைப் பற்றி அவரவர் தம் தம் கருத்து முற்றுமாறு இழுத்தலாலே நீ அவரிடைப்பட்டு மிக வருந்துகின்ற நிலைமையை; கண்டனென் கண்டு எவன் செய்கு - யான் கண்கூடாகக் கண்டேன், கண்டும் நின்னை யாது செய்யற்பாலேன் காண்? ஆதலின் நீ யாரையும் அறியேனென்றதெவ்வண்ணங் கொல்? எ - று.

    (வி - ம்.) பாணன் - தூதுசென்று பரத்தையைப் புணர்ப்பிப்பவன். கவலே முற்ற - கவற்சியே மிகுதலால். கால் - காற்று. ஏமுறல் -வீசிமயங்குதல். கடல் மரம் - கப்பல். கண்டும் யாதுசெய்ய வல்லேனென்றதனால் கேட்ட தலைவி புலவிநீங்குமென்றதாம். அவரிடைப்பட்ட அஞர் நிலையுரைத்தது தலைவி அவன்மாட்டு இரக்கங்கூர்தற்பொருட்டு, அஞர் நிலையென்றது கையாறு, இடுக்கண், நடுக்கமுதலாயின. மெய்ப்பாடு - வெகுளியைச் சார்ந்த அச்சம் பயன் - வாயின் மறுத்தல்.

    (பெரு - ரை.) ஏமுறுதல் - பெருகுதல். பை - துன்பம். துன்பந்தருகின்ற காலத்தே என்க.

(30)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி வன்புறை எதிரழிந்தது.

    (து - ம்.) என்பது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டும் ஒரு சிறைப்புறமாக வருதலையறிந்த தோழி அவன்கேட்டு விரைய வரையுமாற்றானே தலைவியை நோக்கி அவர் இன்னே வருகுவராதலின் நீ வருந்தாதேயென்று வற்புறுத்திக் கூறினாட்குத் தலைவி யான் எங்ஙனமாற்றுவேன், அவன் முயங்குமுன் இனியதாயிருந்த கடற்றுறையும் இப்பொழுது வெறுப்புடைத்தாயிற்றேயென வருந்திக் கூறா நிற்பது.

    (இ - ம்.) "கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்" (தொல்-கள- 22) என்னும் விதிகொள்க.

    
அண்ணாந் தேந்திய வனமுலை  
    
மாயிரும் பரப்பகந் துணிய நோக்கிச்  
    
சேயிறா வெறிந்த சிறுவெண் காக்கை 
    
பாயிரும் பனிக்கழி துழைஇப் பைங்கால் 
    
தான்வீழ் பெடைக்குப் பயிரிடூஉச் சுரக்குஞ்