(து - ம்,) என்பது, களவின் வந்தொழுகுந் தலைமகனது பிரிவினால் மெலிந்த தலைமகளைத் தோழி நெருங்கி, நின்னை நாள்தோறும் தலைமகன் வந்து முயங்கி முயங்கி ஏகுங்காலையும் நீ மெலிகின்ற தென்கொலோவென்றாட்கு, இறைமகள் இயற்கைப்புணர்ச்சி வந்ததுபோன்று காதலன் கொடிய நெறியை அஞ்சானாய் நாளும் வருதலால் யான் எவ்வாறு துயரின்றி வைகுவேன் என மெலிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பொழுதும் ஆறும் புரைவதன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.
துறை : (2) வன்பொறை எதிர்மறுத்ததூஉமாம்.
(து - ம்,) என்பது, வெளிப்படை.
(உரை இரண்டற்கும் ஒக்கும்.) (இ - ம்.) இதுவுமது.
| இகுளைத் தோழியிஃது என்னெனப் படுமோ |
| குவளை குறுநர் நீர்வேட் டாங்கு |
| நாளும் நாளுடன் கவவவுந் தோளே |
| தொன்னிலை வழீஇயநின் தொடி யெனப் பன்மாண் |