(து - ம்.) என்பது, தலைமகனது குறைதீர்க்க உடன்பட்ட தோழி தலைவியினருகு சென்று கண்ணாலே குறிப்பித்துத் தன்வயமாக்க முயன்றும் அவள் முகங்கொடாமையாலே தன்னுள்ளே அவன் ஆற்றுவானல்லனே யென்று தான் ஆற்றாளாய் இப்பொழுது யான் குறிப்பாற் கூறினுந் தேர்வாளல்லள்; சோலையின் கண்ணே சென்றவழிப் பணிந்து மொழியின் வினவும் போலுமென்று தன்னுள்ளே கூறாநிற்பது.
(இ - ம்.)இதற்கு, "குறைந்து அவட் படரினும்"
(தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
துறை : (2) தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கலளாய் ஆற்றாது தன்னுள்ளே சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, முன் கூறியபடி தோழி தலைமகளிடஞ் சென்று அவள் குறிப்பறியாளாய்த் தானே ஆற்றாது சொல்லியதுமாகும்.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதுவுமது,
| மாவென மதித்து மடலூர்ந்து ஆங்கு |
| மதிலென மதித்து வெண்தேர் ஏறி |
| என்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயின் |
| சேரி சேரா வருவோர்க் கென்றும் |
5 | அருளல் வேண்டும் அன்புடை யோயெனக் |
| கண்ணினி தாகக் கோட்டியுந் தேரலள் |
| யானே எல்வளை யாத்த கானல் |
| வண்டுண் நறுவீ நுண்ணிதின் வரித்த |
| சென்னி சேவடி சேர்த்தின் |
10 | என்னெனப் படுமோ என்றலும் உண்டே. |
(சொ - ள்.) அன்புடையோய் என்வாய் நின்மொழிமாட்டேன் மா என மதித்து மடல் ஊர்ந்து மதில் என மதித்து வெள்தேர் ஏறி - அன்புடைய தோழீ! கானலின்கண் ஒருவர் என்பால் வந்து இரந்து கூறலும் அதனைப் பொறேனாகி 'என்வாயினால் நீ கூறும் மொழியைச் சென்று தலைவியிடம் கூறுகின்றிலேன், நின்