பக்கம் எண் :


589


     (பெரு - ரை.) கமம் - நிறைவு. மாதிரம் - திசை. அழிதுளி - மிக்க துளியுமாம். இடக்கண்ணில் புடைத்தலாலே எழும் ஒலிபோன்று என்க.

(347)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, வேட்கைபெருகத் தாங்கலளாய் ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன்பால் அவாமிகுதலானே அது தாங்காத தலைவி நிலவு பரந்தது, ஊர் திருவிழா அயர்கின்றது, கானம் வண்டொலிசெய்யா நின்றன; இவ்விரவில் யான் கண்ணுறங்கிலேனே; அதனால் என்னொடு இவ்வுலகு போர் செய்யுமோ? அன்றேல் இவ்வுலகொடு என் நெஞ்சு போர்செய்யுமோ? ஒன்றுந் தோன்றவில்லையே என்று புலம்பா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
நிலவே, நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பிப் 
    
பான்மலி கடலில் பரந்துபட் டன்றே 
    
ஊரே, ஒலிவருஞ் சும்மையொடு மலிதொகுபு ஈண்டிக் 
    
கலிகெழு மறுகின் விழவய ரும்மே 
5
கானே, பூமலர் கஞலிய பொழிலகந் தோறும் 
    
தாம்அமர் துணையொடு வண்டிமி ரும்மே 
    
யானே, புனைஇழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு 
    
கனையிருங் கங்குலுங் கண்படை இலனே  
    
அதனால், என்னொடு பொருங்கொல்இவ் வுலகம் 
10
உலகமொடு பொருங்கொல்என் அவலமுறு நெஞ்சே.

     (சொ - ள்.)நிலவு நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி - நிலவோவெனில். நீல நிறமுடைய ஆகாயத்திலே பலவாய கதிர்களைப் பரப்பி; பால் மலி கடலின் பரந்து பட்டன்று - பால் நிரம்பிய கடல் போலப் பரந்துபட்ட தன்மையதாயிராநின்றது; ஊர் ஒலிவரும் சும்மையொடு மலி தொகுபு ஈண்டிக் கலி கெழு மறுகின் விழவு அயரும்மே - இந் நிலா நாளில் இவ்வூரோவெனில் தழைத்துவரும் பேர் ஒலியுடனே நிறைந்து ஒருசேரக் கூடி ஓசைமிக்க தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மையதாயிராநின்றது; கான் மலர் பூ கஞலிய பொழில் அகந்தோறும் தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே - காடோவெனில் மலர்ந்த பூ விளங்கிய சோலையினிடங்கள் தோறும் தாம்தாம்