பக்கம் எண் :


595


சிறிய குன்றினிடத்திலே; சாந்தின் செய்த களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து - சந்தனமரத்தாற் செய்த களிற்றியானையின் வலிமைக்கு அஞ்சாத புலித் தோலால் வேய்ந்த கட்டுப் பரணிடத்திலே தங்கியிருந்து; சிறுதினை வியன் புனங்காப்பின் - சிறிய தினைகளையுடைய அகன்ற புனத்தை மறுபடியுஞ் சென்று பாதுகாத்திருப்பாளாயின்; என் தோழி தன் நலன் பெறுகுவள் மன்னே - என் தோழி தன் அழகை மீண்டும் பெறாநிற்பள், அது வீணே கழிகின்றது!; எ - று.

     (வி - ம்.)புலித்தோலால் வேய்ந்த இதணாதலின், யானை கறுவு கொண்டு மோதினும் சிதைவுபடாத பரணென்பது; அனைய பரணிலிருப்பேமாதலின் யாங்களும் இவ் வேலன் எடுக்கும் வெறியாட்டினுக்கு அஞ்சேமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வெறிவிலக்கல்.

     (பெரு - ரை.) சாந்திற் செய்த இதணம், புலியதள் இதணம் எனத் தனித்தனி கூட்டுக. இளமை - பேதைப்பருவம் என்க. 'வேங்கையங் கவட்டிடை' என்றும் பாடம். தினையையுடைய அகன்ற புனம் என்க.

(351)
  
     திணை : பாலை.

     துறை : இது, பொருள்வயிற்பிரிந்த தலைமகன் இடைச்சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.

     (து - ம்.) என்பது, அங்ஙனம் சுரநெறி செல்கின்ற தலைமகன் தன் காதலியை நினைத்துக் கண்களை மூடியிருந்து விழித்தலும், தலைவியின் உருவம் தோன்றலால் வியந்து, இஃதென்னை நாம் செல்லவும் அரிய இந்நெறியில் இவ்விள மடந்தை எவ்வாறு வந்தனள் கொல்லோ; இவள் இரங்கத்தக்காளாயினாளே என்று மருண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல் கற். 5) என்பதனாற் கொள்க.

    
இலைமாண் பகழிச் சிலைமாண் இரீஇயபணீஇயர் 
    
அன்பில் ஆடவர் அலைத்தலின் பலருடன்பணீஇயர் 
    
வம்பலர் தொலைந்த அருஞ்சுரக் கவலைபணீஇயர் 
    
அழல்போல் செவிய சேவல் ஆட்டிபணீஇயர் 
5
நிழலொடு கதிக்கும் நிண்புரி முதுநரிபணீஇயர் 
    
பச்சூன் கொள்ளை மாந்திவெய்து உற்றுத்பணீஇயர் 
    
தேர்திகழ் வறும்புலந் துழைஇ நீர்நயந்துபணீஇயர் 
    
பதுக்கை நீழல் ஒதுக்கிடம் பெறாஅபணீஇயர்