பக்கம் எண் :


597


     (பெரு - ரை.) குறுமகள் என்றது தன் மனக்கண்ணிற் றோன்றும் உருவெளியை. 'அருஞ்சுரக் கவலை' என்றும் பாடம்.

(352)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி ஆற்றதருமை யஞ்சித் தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் இரவின்கண் வருதலையறிந்த தோழி நெருங்கி 'மலைநாடனே! இரவின் கண்ணே கொடிய நெறியில் வருதலால் நீ சால்புடையை அல்லை'யென வெகுண்டு கூறி உள்ளுறையால் மணஞ் செய்துகொள்ள வருவாயாகவெனவும், 'அங்ஙனம் வருவையேல் எமர் எதிர்கொண்டு மகட்கொடை நேர்வ' ரெனவுந் தெளியக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
ஆளில் பெண்டிர் தாளின் செய்த 
    
நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள 
    
ஆடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை 
    
முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழங் 
5
கல்லுழு குறவர் காதல் மடமகள் 
    
கருவிரன் மந்திக்கு வருவிருந்து அயரும் 
    
வான்தோய் வெற்ப சான்றோய் அல்லைஎம் 
    
காமங் கனிவது ஆயினும் யாமத்து 
    
இரும்புலி தொலைத்த பெருங்கை யானை 
10
வெஞ்சின உருமின் உரறும 
    
அஞ்சுவரு சிறுநெறி வருத லானே. 

     (சொ - ள்.) ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண் பனுவல் போல - தேட்டத்திற்குரிய காதலன் இல்லாத தாபதமகளிர் தாம் தேடி உண்ணுமாறு முயன்று நூற்கின்ற நுணங்கிய நுண்ணிய பஞ்சுபோல; கணம் கொள ஆடும் மழை தவழும் கோடு உயர் நெடு வரை - கூட்டமாகக் காற்றால் அலையப்படும் மேகந் தவழ்கின்ற கொடுமுடிகள் உயர்ந்த நெடிய மலையிடத்து; முடம் முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம் - முடப்பட்டு முதிர்ந்த பலாமரத்திலுள்ள குடம் போன்ற பெரிய பழத்தின் சுளையை; கல் உழு குறவர் காதல் மடம் மகள் - மலைச்சாரலில் உழுதுண்டு வாழுங் குறவர் தாம் அன்போடு பெற்று வளர்த்து வருகின்ற இளமகள்; கரு விரல் மந்திக்கு வரு விருந்து