(து - ம்.) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகனை நெருங்கிய தோழி, 'ஐயனே ! நினது கேண்மை அலராய் விளைகின்ற'தென்று கூறி, இறைச்சியாலே தலைமகளை இவ்வயிற் செறித்தமை சொல்லி, அஃது எவ்வாறு யாங்கள் பொறுப்பதென வரைவுகடாவா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "காப்பின் கடுமை . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.