(து - ம்.)என்பது, தலைமகன் அந்தணர், சான்றோர் முதலாயினாரொடு வரைவு வேண்டி வருதலும் தலைமகளின் தமர் உடன்படாமை கண்டு அவன் தனது நெஞ்சை நெருங்கி, 'என் நெஞ்சமே! இதுகாறும் நீ வருந்தியதனை யான் அறிவேன் காண்; இங்ஙனம் வருந்தியதன் பயனாகவேனும் நம் காதலி நம் அருகிலே வைகுமாறு கிடைப்பளோ? ஒன்று கூறுவாயாக'வென்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பரிவுற்று மெலியினும்" ('தொல். கற். 12) என்னும் விதிகொள்க.
| நிலந்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த |
| விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் |
| பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி |
| வானர மகளிர்க்கு மேவல் ஆகும் |
5 | வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் |
| அசைவில் நோன்பறை போலச் செல்வர |
| வருந்தினை வாழியென் உள்ளம் ஒருநாள் |
| காதலி உழையள் ஆகவும் |
| குணக்குத்தோன்று வெள்ளியின் எமக்கும்ஆர் வருமே. |
(சொ - ள்.)என் உள்ளம் வாழி - என் உள்ளமே! நீ வாழ்வாயாக!; நிலம் தாழ் மருங்கின் தெள் கடல் மேய்ந்த - நிலத்தின் கண்ணே ஆழ்ந்த இடத்தினையுடைய தெளிந்த கடலருகு சென்று இரைதேடி