பக்கம் எண் :


604


     (து - ம்.) என்பது, களவின் வழிவந் தொழுகுபவன் வரைந்து கொள்ளாது பலநாள்காறும் நீட்டித்தலான் எவ்வண்ணமாயினும் வரைய வருமென்னும் தெளிவினால் வருந்தாத தலைமகள் தோழியை நெருங்கி, 'என்னுள்ளம் சாரல் நாடனோ டாடிய நாளை யெண்ணி வருந்த அறியாதது ஆதலின், அது காரணமாக நினது எண்ணம் எவ்வாறோ'வென வினவி யறியா நிற்பது.

     (இ - ம்.) இதனை, "வரைவிடை வைத்த காலத்து" (தொல். கள. 21) என வரும் நூற்பாவின்கண் 'தானே கூறுங் காலமும் உளவே' என்பதனாற் கொள்க.

     துறை : (2) மனைமருண்டு வேறுபாடாயினாய் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, மனைமருளல் - மனையிலிருந்தவாறே மருளுதல். ஏனைய வெளிப்படை. (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்.) இதுவுமது.

்்
    
நின்குறிப்பு எவனோ தோழி என்குறிப்பு 
    
என்னொடு நிலையா தாயினும் என்றும்  
    
நெஞ்சுவடுப் படுத்துக் கெடஅறி யாதே 
    
சேணுறத் தோன்றுங் குன்றத்துக் கவாஅன 
5
பெயலுழந்து உலறிய மணிப்பொறிக் குடுமிப் 
    
பீலி மஞ்ஞை ஆலுஞ் சோலை 
    
அங்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை 
    
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி 
    
நீரலைக் கலைஇய கண்ணிச 
10
சாரல் நாடனொடு ஆடிய நாளே. 

     (சொ - ள்.) தோழி என் குறிப்பு என்னொடு நிலையாது ஆயினும் - தோழீ! என் கருத்தானது என்னோடு பொருந்தாதாயினும:் சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன் - ஆகாயத்தில் உயர்ந்து நன்றாகத் தோன்றுகின்ற மலையின் பக்கத்தில்; பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை - மழைபெய்யுமளவில் அம் மழையிலே நனைந்து மயிர் சிலிர்த்த நீலமணிபோன்ற புள்ளிகளையுடைய குடுமியையும் பீலியையுமுடைய மயில் சென்று; ஆடும் சோலை அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ்சுனை - உலாவி வருகின்ற சோலை சூழ்ந்த அழகிய இடமகன்ற கற்பாறையில் உற்ற அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையிடத்துள்ள; உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி - மையுண்ட கண்ணையொத்த குவளைமலர்களைக் கொய்து; நீர் அலைக் கலைஇய கண்ணிச் சாரல் நாடனொடு - நீராடும்பொழுது அந்நீர் அலைத்தலானே குலைந்த மாலையையுடைய