(து - ம்.) என்பது, தலைமகன் வேற்று நாட்டுச் சென்று வந்துழி, அவன் குறித்த பருவம் கடந்ததனாலே தலைவி துனிகூருமென்ற வாயில்களை நெருங்கித் தோழி 'நீயிர் கவல்வதென்னை? அவனது தேரைக் குதிரைகள் கொண்டுவந்து தந்தன; அதுகண்ட இறைவி தானடைந்த துன்பமெல்லாம் நீங்குதலாலே விருந்தேற்கும் விருப்பினளாய் இராநின்றன'ளென உறழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும்" (தொல். கற். 9.) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனாற் கொள்க.
| சிறுவீ முல்லைப் பெரிதுகமழ் அலரி |
| தானுஞ் சூடினன் இளைஞரும் மலைந்தனர் |