பக்கம் எண் :


615


பாடம். இப் பாடஞ் சிறப்புடையது, இதற்குத், தென்கடல் நாட்டிற்குச் செல்வேன் என்று எம்பால் விடைகொண்டு செல்லுவா யாயின் துறை மணல்கொண்டு வா என இயைபு காண்க! வியம் - விடை

.
(363)
  
     திணை : முல்லை.

     துறை : இது, தலைமகள் வரைவிடை மெலிந்தது.

     (து - ம்.) என்பது, தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிகின்றான் குறித்த பருவம் வருதலும் தலைமகள் ஆற்றாளாய்த் தோழியை நோக்கித் தோழீ! அவர் குறித்த பருவம் வந்து நீங்குதலுமாகின்றது; இங்ஙனம் இன்னும் சில வைகல் கழிந்து மாரியொடு மாலையம்பொழுதுஞ் சேரவந்தால் யான் உயிர் வாழலேனென் றழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.

    
சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்  
    
மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி 
    
ஆர்கலி வானம் நீர்பொதிந்து இயங்கப் 
    
பனியின் வாடையொடு முனிவுவந் திறுப்ப 
5
இன்ன சில்நாள் கழியின் பல்நாள் 
    
வாழலேன் வாழி தோழி ஊழின் 
    
உருமிசை அறியாச் சிறுசெந் நாவின் 
    
ஈர்மணி இன்குரல் ஊர்நனி இயம்பப் 
    
பல்லா தந்த கல்லாக் கோவலர் 
10
கொன்றையந் தீங்குழல் மன்றுதோறு இயம்ப 
    
உயிர்செலத் துனைதரு மாலை 
    
செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே. 

     (சொ - ள்.) தோழி வாழி சொல்லிய பருவம் கழிந்தன்று - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! தலைவர் வருவேம் என்று சொல்லிப்போன பருவமோ வந்து நீங்குதலாயிற்று; எல்லையும் மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி - பகற்பொழுதும் இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடொன்றி; ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க - நிரம்பிய இடி முழக்கத்தையுடைய மேகம் நீர் நிறையப் பெற்று இயங்காநிற்ப; வாடையொடு பனியின் முனிவு வந்து இறுப்ப - வாடைக் காற்றுடனே பனிக்கு உண்டாகிய சின மெல்லாம் என்மீது வந்து தங்காநிற்ப; இன்ன சில் நாள் கழியின் - இவ்வாறாகிய நாள் சில கழிவன