(து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீளுந் தலைமகன், தான் காதலியைக் கண்டு மகிழ்வதனை நினைந்து விரைய வருகின்றான் நெறியில் வந்து கண்ட அயலாரொடு, 'அயலீர், எம் காதலி எமக்கு விருந்தயரும் விருப்பினளாய் உணவு அமைக்கும் நிலைமையை இதன் முன்னம் முழுமையும் பெற்றுடையேமோ? இல்லையே! இப்பொழுது பெறலாகியதே! இஃது என்ன வியப்பு," என மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "அருந்தொழின் முடித்த செம்மற்காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| முரம்புதலை மணந்த நிரம்பா இயவின் |
| ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் |
| களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப |
| உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலீர் |
10 | முற்றையும் உடையமோ மற்றே பிற்றை |