பக்கம் எண் :


639


    
எரிஅகைந்து அன்ன வீததை இணர 
    
வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய 
5
தேம்பெய் தீம்பால் வௌவலின் கொடிச்சி 
    
எழுதெழில் சிதைய அழுத கண்ணே 
    
தேர்வண் சோழர் குடந்தை வாயில் 
    
மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த 
    
பெயலுறு நீலம் போன்றன விரலே 
10
பாஅய் அவ்வயிறு அலைத்தலின் ஆனாது 
    
ஆடுமழை தவழுங் கோடுயர் பொதியின் 
    
ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த 
    
காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே.  

     (சொ - ள்.) புன் தலை மந்திக் கல்லா வன் பறழ் குன்று உழை நண்ணிய முன்றில் போகாது - ஐயனே! புல்லிய தலையையுடைய பெண் குரங்கினது தன் தொழிலையும் முற்றக் கற்றறியாத வலிய குட்டி சிறிய குன்றினிடத்துப் பொருந்திய சிறுகுடியின்கணுள்ள மனைவாயினின்றும் போகாது; எரி அகைந்து அன்ன வீ ததை இணர வேங்கை அம் படு சினை - எரி கப்பு விட்டாற்போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளைமீது; பொருந்திக் கொடிச்சி கைய தேம் பெய் தீம் பால் வௌவலின் - மறைந்திருந்து நீ காதலித்த கொடிச்சி கையகத்திருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தொடு வலிந்து பற்றிக்கொண்டு சென்றுவிட்டதனால்; எழுது எழில் சிதைய அழுத கண்ணே - ஓவியர் எழுதுதற் குரிய அழகெல்லாம் கெடும்படி அழுத அவளுடைய கண்கள்; தேர் வண் சோழர் குடந்தை வாயில் மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயல் உறும் நீலம் போன்றன - இரவலர்க்குப் பரிசாகத் தேர்களைக் கொடுக்கின்ற வண்மையுடைய சோழமன்னவர்க்குரிய 'குடவாயில்' என்னும் ஊரகத்து மழைபெய்து நிரம்பப் பெற்ற அகழியிலே தண்ணியவாய் மலர்ந்த பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலர் போன்றன; அல் வயிறு பாஅய் அலைத்தலின் விரல் சிவந்து - அங்ஙனம் பாற்கலம் பறிபட்டதற்கு ஆற்றாது அழகிய வயிற்றிலே பரவ அடித்துக்கொண்டதனால் அவளுடைய விரல்கள் சிவந்து; ஆனாது ஆடும் மழை தவழும் கோடு உயர்பொதியின் ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த காந்தளம் கொழுமுகை போன்றன - அமையாது இயங்குகின்ற மேகந்தவழும் கொடு முடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் என்னும் உயர்ந்த பெரிய மலையில் மலர்ந்த கொழுவிய காந்தளின் மலரும் பருவமுகை போன்றன; இத்தகைய இளமைவாய்ந்த அறியாமடமையாள்