பக்கம் எண் :


640


நின்னை மயக்கினள் என்பதும் நின்காமந் தணிக்கு மென்பதும் எவ்வண்ணமோ? ஒன்று கூறுவாயாக! எ - று.

     (வி - ம்.) படுசினை - தாழ்ந்த கிளை. தேம்பெய்பால் - கண்ட சருக்கரையொடு கலந்த பால். குடந்தை: குடமென்பதன் திரிபு. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - பேதைமையூட்டல்.

     (2) உரை :- கொடிச்சியாகிய தோழீ! யான் மெய் துவண்டது தான் என்னென்றனையே! பால் வௌவலின்கண் அழுது நீலம் போன்றன; வயிறலைத்தலின் விரல் காந்தள் போன்றன; எ - று.

     கொடிச்சி வயிறலைத்து அழுமாறு, மந்தியின் மகவு பாலை வௌவுதல் போல நீ மனந்தளருமாறு ஏதிலார் பொன்னணிந்து தலைவியைக் கைக்கொள்ளினுமாம்; ஆதலின், இன்னே வரைகவென் றுரைத்தாளென வேறு மொருபொருள் பயப்பது அறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

(379)
  
     திணை : மருதம்.

     துறை : இது, பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.

     (து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் துனிகொண்ட தலைமகளது ஊடல் தீர்க்குமாறு பாணனை விடுப்ப வந்தானை நோக்கிய தோழி "பாணனே! தலைவி ஈன்ற அணிமையால் முயங்குதற்குரியளல்லள்; ஆதலால் ஊரனைப் பரத்தையர் சேரிக் கண்ணே கொண்டு செல்வாயாக; எம்மைத் தொழாதே கொள்; பயனில கூறற்க" என மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பாணர்................பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" என்னும் விதிகொள்க.

    
நெய்யும் குய்யும் ஆடி மையொடு 
    
மாசு 1 பட் டன்றே கலிங்கமும் தோளும் 
    
திதலை மென்முலைத் தீம்பால் 2 பிலிற்றப் 
    
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே 
5
வாலிழை மகளிர் சேரித் தோன்றுந் 
    
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் 
    
பொன்புனை நரம்பின் இன்குரல் சீறியாழ் 
    
எழாஅல் வல்லை ஆயினுந் தொழாஅல் 
    
கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப் 
10
பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப் 
    
புரவியும் பூணிலை முனிகுவ 
    
விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே. 
  
 (பாடம்) 1. 
பட்டின்று.
 2. 
பிலிற்றா; பனிற்ற.