பக்கம் எண் :


648


     திணை : நெய்தல்.
    
1 எல்லை சென்றபின் மலருங் கூம்பின 
    
புலவுநீர் அடைகரை யாம்பார்ப் போடும் 
    
அலவனும் அளைவயின் செறிந்தன கொடுங்கழி 
    
இரைநசை வருத்தம் வீட மரமிசைப் 
    
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் 
    
பொழுதன்று ஆகலில் தமியை வருதி 
    
எழுதெழில் மழைக்க.............. 
(385)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புகுவலென முற்பட்டாள் தலைமகள்மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்தும் பிறிதொன்றன்மேல் வைத்துப் பாவியேன் இன்று பேதைமை செய்தேன் எம்பெருமாட்டி குறிப்பு உணர்ந்து ஆவேன்மன்னோ வழிப்படுவேன் எனச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் வேண்ட நேர்ந்த தோழி தலைமகனைக் கண்ணாலே குறிப்பாகக் கூறி அறிவேனென வந்து அவன் பொய்கூறினானென இறைவி சினமாறாமை கண்டு வேறொரு காரியமாக அங்கு வந்தவள் போலக் காட்டிப் பின்னர் யான் இவள் கருத்தறியாது இறைவனுக்கு வாயில்நேர்ந்தேன்; அது கழிந்தது; இங்கு இவளது குறிப்பறிந்து அவ்வா றொழுகுவேன் என்று கருதி இறைவியை நெருங்கி மலைநாடன் களவின்கண்ணே நின்பால் சூளுறலும் நீ இழித்துக் கூறினையாகப் பின்னர் வரைவொடு புகுதக்கண்ட யான் அவர் பொய்யுரையாரென வியந்தேனென்பாள், உள்ளுறையால் அத்தகைய மெய்ம்மையுடைய தலைவர் இப்பொழுது நின் முன்றிலில் நிற்கின்றனர் காணென நயந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்  
    
துறுகண் கண்ணிக் கானவர் உழுத  
    
குலவுக்குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்  
 1. 
கிடைத்த படிகளனைத்தினும் இப்பாட்டு இந்த அளவே காணப்படுகிறது ;
இதன் எஞ்சிய பாகமும் துறைக்குறிப்பும் பாடினார் பெயரும் காணப்படவில்லை.