(து - ம்,) என்பது, தலைமகன் வரைவொடு வருதலை யறிந்த தோழி, தலைவியை நெருங்கி மகிழ்ந்து கூறுகின்றாள், 'நம் காதலர் நாம் உய்யுமாறு புதியராகி வரும் வருகையும் நாணம் மீதூர்தலான் நாம் ஒருங்குவதும் காண்பாராயின், அவர் வரைய வந்ததற் கேற்ப நமர் உடன்படுவரோ?" 'உடன்படின் காதலரோடு மகிழ்ந்து பேசுவரோ?' என ஆய்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின் |
| கடுஞ்சூல் வயப்பிடி கன்றீன்று உயங்கப் |
| பாலார் பசும்புனிறு தீரிய களிசிறந்து |
| வாலா வேழம் வணர்குரல் கவர்தலின் |
5 | கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி |