பக்கம் எண் :


665


கொள்ளுகின்ற; கடல் கெழு மாந்தை அன்ன எம் - கடற்கரையின்கண் விளங்கிய மாந்தை நகர்போன்ற எம்மை; வேட்டனை அல்லை - விரும்பி யொழுகுவாயல்லையாதலின்; நலம் தந்து செல் - நின்னாலிழந்த எமது நலனைக் கொடுத்துவிட்டு அப்பாற் செல்லுவாயாக! எ - று.

     (வி - ம்.) அணிந்து இடு பூ - அணிந்து கழத்துப் போகட்ட மலர்.

    உள்ளுறை :- மகளிர் கழித்துப் போகட்ட பூவை முதிர்ந்த பெற்றம் தின்னுமென்றது, நீ களவொழுக்கத்துக்கூடிப் பின்பு கைவிட்ட தலைவியை ஏதிலார் போந்து மணம் நயவாநிற்ப ரென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - நலந்தொலைவுரைத்து வரைவு கடாதல்.

     (பெரு - ரை.) 'கொண்க' என்னும் விளியை ஏற்ற இடத்தில் ஒட்டுக இனி இச்செய்யுளைக் கற்பாக்கி ''மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்'' என்னும் துறைக்குக் காட்டினுமாம். எனவே இதற்கு இருவகைக் கைகோளும் ஆம். 'நம்மிடையே நினைப்பின்' என்றும், 'வேந்தடு மயக்கத்து' என்றும் பாடம். 'ஆ' என்றதற்கு முதிர்ந்த என்னும் அடை மிகையாம்.

(395)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, (1) இது, தோழி தலைமகனை வரைவுகடாயது.

     (து - ம்,) என்பது, வரையாது களவொழுக்கம் நீட்டித்தானைத் தோழி நெருங்கி, 'மலைநாடனே! நின் மார்பால் வருந்திய நோயை யாரிடம் கூறுவேன்? பலகாலும் இனியகூறி அருளாயாய் நீ மயங்கா நின்றனை' என வரைந்து கொள்ளுங் குறிப்புத் தோன்ற வினாவா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, ''களனும் பொழுதும் ............. அனைநிலைவகையான் வரைதல் வேண்டினும்'' (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

     துறை : (2) வரைவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல்லியதூஉமாம்.

     துறை : (3) இரவுக்குறி மறுத்ததூஉமாம்.

என்பன வெளிப்படை. (உரை மூன்றற்கு மொக்கும்.)

    
பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத் 
    
தேன்தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப 
    
வேங்கை தந்த வெற்புஅணி நன்னாள் 
    
பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக் 
5
கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை 
    
பாசறை மீமிசைக் கணங்கொள்பு ஞாயிற்று