(து - ம்,) என்பது, பரத்தையானவள் தன்னைப் பிரிகின்ற தலைவனை நெருங்கி, ஊரனே! நீயின்றி யானிருப்பேனாகில் இவ்விடத்தில் என்ன பிழைப்பிருக்கிறது? சிறந்த நட்போடளாய் என்னெஞ்சினின்று நீங்க அறிந்தா யல்லை; நீ உளனா யிருத்தலானே யானும் உளேன் ஆவேனெனப் புகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் 'இவற்றொடு பிறவும்' என்பதன்கண் அமைத்துக்கொள்க.