பக்கம் எண் :


690

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
உகுபைங்காய் - விழுகின்ற பசியகாய்
உசாவாய் - சூழ்ச்சி சொல்லும் துணையாய்
உடை ஓர் பான்மை - ஆடையை ஆராய்கின்ற பகுதி
உட்குவரும் நடுநாள் - அச்ச மிக்க நடுயாமம்
உணக்கு - உலர்த்தும் புலர்த்தும்
உணக்கல் - காயவைத்தல்
உணங்க - புலருமாறு
உண்கண் - மையுண்ட கண்கள்
உத்தி - படப்பொறி
உதுக்காண் - உவ்விடத்தே பாராய்
உந்தி - யாறு
உமணர் - உப்புவாணிகர்
4, 13, 8, 331
உயவல் - வருத்தம்
உயவு - வருத்தம்
உயவுதோறும் - நரலுந்தோறும்
உயவும் - வருந்தும்
உய்கம் - உய்ந்து வாழ்வோம்
உரம்புரி - வலிமைமிக்க
உரவு - வலிமை
உரவுத்திரை - வலியஅலை
உரறல் - முழங்கல்
உரறுதல் - முழுங்குதல்
உரவுக்கணை - வலியகணை
உருகெழுதெய்வம் - பேயும் பூதமும் நிரையப் பாலரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினார்
உருப்பவிர் அமையத்து - வெப்பமிக்க பொழுதில்
உருப்பு - வெப்பம்
உருப்பு - அச்சம்
உருமின் - இடியோசைபோல
உருமு - இடி
உலந்த - காய்ந்து வாடிய
உலவை - காய்ந்த கிளை
உலவை - காற்று