அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
உலவை - கிளைகள் | |
உலறுதல் - காய்தல் | |
உலறுதல் - சிலும்புதல் | |
உவக்காண் - உவ்விடத்தே பார் | |
உவர் - இனிய சுவை | |
உவல் - சருகு | |
உழந்தன்று - ஒடுங்கிற்று | |
உழைமான் - இருபெயரொட்டு | |
உளி - எஃகினாலாகிய ஈட்டி | |
உள்ளூர் - ஊர்உள் | |
உறந்தை - உறையூர் | |
உறா அநோக்கம் - பொருந்தாப்பார்வை, கடைக்கண்ணால் நோக்கும் நோக்கம் | |
உறை - தேன்துளி | |
உறை - மழை | |
உறைப்ப - மிகவிழ | |
உறைவி - உறைபவள் | |
ஊக்குதல் - அசைத்தல் | |
ஊங்கண் - உவ்விடம் | |
ஊங்கு - உவ்விடம் | |
ஊதல் - உண்ணுதல் | |
ஊழுறுபூ - மலர்ந்து கழியும் பழம்பூ | |
எஃகுதல் - வில்லால் அடித்தல் | |
எகினம் - நாய் | |
எக்கர் - மணற்றிடர் | |
எண் - எள்ளு | |
எண்கின் ஏற்றை - ஆண் கரடி | |
எதிர்கொண்ட - எதிரேற்றுக் கொண்ட | |
எதிர்தோன்றுதல் - உருவெளித் தோற்றம் | |
எதிரொளி - பிரதிவிம்பம் | |
எமர் - சுற்றத்தார் | |
எயில் - மதிலுறுப்பு | |
எயிறு உண்கு - வாயை முத்தம் இடுவேன் | |
எய் - முட்பன்றி | |
எய்த்தல் - அறிதல் | |
எய்யாமை - அறியாமை | |
எருக்கங்கண்ணி - தலைமகன் சூடுவது | |
எருக்குதல் - அழித்தல் | |