(து - ம்.)என்பது முன்பு பொருள் தேடச் சென்றிருந்து வந்த தலைமகன் மற்றொரு காலத்துப் பின்னும் பொருள்தேடும்படி கருதிய நெஞ்சை நோக்கி நெஞ்சே ! மாலைப்பொழுது வரக்கண்டு இம்மாலைப்பொழுது நம்காதலி நம்மைக் கருதி வருந்துதற்குரிய காலமென்று முன்பு பிரிந்தவிடத்துக் கருதினேன் அல்லனோவென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்",
(தொல். கற். 5) என்னும் விதி கொள்க.