பக்கம் எண் :


6


2. பெரும்பதுமனார்
திணை : பாலை.

துறை : இஃது, உடன் போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது.

    (து - ம்.)என்பது தலைவனும் தலைவியும் ஒருப்பட்டெழுந்து சுரத்திடைச் செல்லக் கண்டோர் இக் கொடுஞ்சுரத்தில் இம் மெல்லியலாளைக் கொண்டு செல்லும் இவ்விளையோனுள்ளம், இடியினுங் காட்டிற் கொடிதெனக் கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்டதென்ப" (தொல், அகத், 40) என்னும் விதிபற்றிச் செலவின்கட் கூறியதென்க.

    
அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் 
    
தொலிவல் ஈந்தின் உலவை யங்காட் 
    
டாறுசெல் மாக்கள் சென்னி யெறிந்த  
    
செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய 1  
5
வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை 
    
மரல்நோக்கும் இண்டிவர் ஈங்கைய சுரனே 
    
வையெயிற் றையள் 2 மடந்தை முன்னுற்று  
    
எல்லிடை நீங்கும் இளையோ னுள்ளங் 
    
காலொடு பட்ட மாரி 
    
மால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே. 

    (சொ - ள்.) சுரன் அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து - சுரமோ, ஆழ்ந்துபடக் கிடந்த பெரிய குளிர்ச்சியையுடைய குன்றத்து; ஒலி வல் ஈந்தின் உலவையங்காட்டு-தழைத்த வலிய ஈத்த மரங்களையுடைய காற்றுச் சுழன்று வீசும் காட்டின் கண்ணே; ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த செம்மறுத் தலைய-நெறிகொண்டு செல்லும் மக்களுடைய தலையை மோதியதனாலே குருதி படிந்த சிவந்த மாறுபட்ட தலையையுடையனவும்; நெய்த்தோர் வாய பெருந்தலை வல்லியம் குருளை-இரத்தம் பூசிய வாயையுடையனவுமாகிய பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்; மாலைமரல் நோக்கும் இண்டு இவர் ஈங்கைய - இம் மாலைப் பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரலின் தூஊகளை நிமிர்ந்து நோக்கா நிற்கும் இண்டங் கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடையவாகும், இத்தகைய சுரத்தின்கண்ணே; வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று - கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய

 (பாடம்)1. 
நெய்த்தோர் வல்லியம்;
 2. 
ஐயள் மாயள், மாயள் - கரிய மேனியள்.