அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | |
வீழ்ந்தகால் - காலிறங்குதல் - அஃதாவது மழை பெய்ய இறங்கும் நீர் வீழ்ச்சி | |
வீளை - அம்பினொலி | |
வீறு - பெருமை | |
வெண்காக்கை - கருங்காக்கை; வெண்மை கருமைமேற்று | |
வெண்குருகு - நாரை | |
வெதிர் - மூங்கில் | |
வெய்ய - வெய்யவாக | |
வெரிந் - முதுகு | |
வெளில் - தயிர் கடைதற்கு நட்டதூண் | |
வெள்ளரை - புரி முதலிய சுற்றாத வெளிய அடிக்கூண்டு | |
வெள்ளில் - விளாமரம் | |
வெள்வசி - வெறும் பிளப்பு | |
வெறி - அச்சம் | |
வெறிமனை - வெறிக்களம் | |
வெறுத்தல் - செறிதல் | |
வேங்கை முதலொடு - வேங்கை யின் அடிமரத்தில் | |
வேலி - மருதவைப்பு, காவல் | |
வேழம் - பேய்க்கரும்பு | |
வேறுணர்தல் - புலியொடு பொருததோ என உணர்தல் | |
வை - கூர்மை | |
வைகலும் - நாடோறும் | |
வைகுமலை - தங்கியிருந்த மலை | |
வைந்நுதி - கூரிய நுனி | |