(து - ம்.) என்பது, தலைவனாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைவி வருந்தியபொழுது முன்னாள் நின் குறுநடைக் கூட்டம் விரும்பிப் பிரியாதிருந்தவர் இப்பொழுது பொருளீட்டுமாறு சேணிடைச்சென்று வருந்துவதானது, பின்னர் நின்னோடு இல்லறம் வழுவாது நடத்தற் பொருட்டன்றோவென இவள் விருந்தெதிர்கொள்ளும் உலகியலையெடுத்துக் காட்டித் தோழி வற்புறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 9) என்னும் நூற்பாவின்கண் 'மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்' என்புழி வரும் பிற என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| பைங்கண் யானைப் பரூஉத்தா ளுதைத்த |
| வெண்புறக் களரி விடுநீ றாடிச் |
| சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப் |