(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிவின்கண்ணே சிறைப்புறத்தானாகிய தலைமகனால் விடுக்கப்பட்டு வாயில்வேண்டிச் சென்றபாணனை மறுக்கின்ற தோழி அத்தலைமகன் கேட்குமாறு தலைவியை நோக்கி 'ஊரன் துணங்கையாடுங் களவைக் கைப்படுக்க யான் சென்ற பொழுது அவன் மகளிர் வடிவந் தாங்கித் தெருக்கடை வரக்கண்டு வினாவ அவன் தான் மகளிரெனக் கொள்ளுமாறு கூறிப்போயினான;் என்னறியாமையால் யானும் அவனை இகழ்ந்து வந்தே'னெனக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்," (தொல்-கற்- 9) என்னும் விதி கொள்க.
| அறியா மையின் அன்னை யஞ்சிக் |
| குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் |
| விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல |
| நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை |
5 | நொதும லாளன் கதுமெனத் தாக்கலின் |
| கேட்பார் உளர்கொல் இல்லைகொல் போற்றென |
| யாணது பசலை யென்றனன் அதனெதிர் |
| நாணிலை எலுவ என்றுவந் திசினே |
| செறுநரும் விழையுஞ் செம்ம லோனென |
10 | நறுநுத லரிவை பாற்றேன் |
| சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே. |
(சொ - ள்.) அன்னை நறுநுதல் அரிவை அறியாமையின் அஞ்சி - அன்னாய் ! நறிய நுதலையுடைய தலைவி ! என் அறியாமையாலே