(து - ம்.) என்பது, வரைபொருட் பிரிந்துவந்த தலைவனைத் தோழி நீ முன்னர் இரவின் வந்து முயங்கியதனாலாய குறிப்புக்களைக் கண்ட அன்னை வினவலும் இவள் விடைகூற அறியாளாய் என்னை நோக்கினளாக, யான் சந்தனவிறகின் கொள்ளியைக் காட்டி இதனாலுண்டாயினவென் றுய்வித்தே னெனத் தானாற்றுவித்திருந்த அருமை தோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவுடம் பட்டோற் கடாவல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க,
| ஓங்குமலை நாட ஒழிகநின் வாய்மை |
| காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி |
| உறுபகை பேணாது இரவின் வந்திவள் |
| பொறிகிளர் ஆகம் புல்லத் தோள்சேர்பு |
5 | அறுகாற் பறவை அளவில மொய்த்தலிற் |
| கண்கோ ளாக நோக்கிப் பண்டும் |
| இனையை யோவென வினவினள் யாயே |
| அதனெதிர் சொல்லா ளாகி அல்லாந்து |