(து - ம்.) என்பது, தலைவியை விட்டுப் பிரிந்து சென்று பொருளீட்டும்படி கருதி முயன்ற தன்னெஞ்சினைத் தலைவன் நோக்கி யான் இவளின் கண்ணாற் கட்டுண்டேன்; இவ்வின்பத்தினுங் காட்டிற் பொருள்சிறவா; அப்பொருள் எங்ஙனமாயினுமாக; இவ்விரண்டினையுமாராய்ந்து சிறந்தது ஒன்றனை நீ யெய்துதற்குரியை எனக்கூறி இல்லத் தழுங்கா நிற்பது. கடைக்கூட்டல் - ஒருப்படுத்தல்.
(இ - ம்.) இதற்குக் "கரணத்தினமைந்து முடிந்த காலை" (தொல்-கற்- 5) என்னும் நூற்பாவின்கண் 'வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்' என்னும் விதி கொள்க.
| புணரின் புணராது பொருளே பொருள்வயிற் |
| பிரியின் புணராது புணர்வே யாயிடைச் |
| சேர்பினுஞ் செல்லா யாயினு நல்லதற் |
| குரியை வாழியென் நெஞ்சே பொருளே |
5 | வாடாப் பூவின் பொய்கை நாப்பண் |
| ஓடுமீன் வழியிற் கெடுவ யானே |
| விழுநீர் வியலகந் தூணி யாக |
| எழுமா ணளக்கும் விழுநெதி பெறினுங் |