பக்கம் எண் :


298


172. . . . . . . . . . . . .
திணை : நெய்தல்.

துறை : (1) இது, பகற்குறிவந்த தலைமகனைத் தோழி வரைவுகடாயது.

    (து - ம்.) என்பது, பகற்குறி வந்தொழுகுந் தலைமகனைத் தோழி வரைவுகடாவுங் குறிப்புத் தோன்றத் 'தலைவனே! இப் புன்னையை யாம் வளர்த்து வந்ததை அன்னை இஃது உங்களுடன்பிறந்த தங்கையென்று கூறினளாதலின் இப் புன்னையின் முன்னர் நும்மொடு நகையாடவும் அஞ்சுகின்றோம்; வேண்டுமெனில் வேறு நிழலுமுண்டன்றோ' என்று பகற்குறி மறுத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

துறை : (2) குறிபெயர்த்தீடுமாம்.

    (து - ம்.) என்றது, வெளிப்படை. (உரை இரண்டற்குமொக்கும்)

    (வி - ம்.)முதற்றுறைக்குக் கூறியதே இதற்குமாம்.

    
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி 
    
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய 
    
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப 
    
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று 
5
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே 
    
அம்ம நாணுதும் நும்மொடு நகையே 
    
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப 
    
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் 
    
துறைகெழு கொண்கநீ நல்கின் 
10
நிறைபடு நீழல் பிறவுமா ருளவே. 

    (சொ - ள்.) விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் - புதியராய் வந்த பாணர் பாடுகின்ற இளைதாய (மெல்லிய) இசைப்பாட்டுப் போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும்; இலங்கு நீர்த் துறைகெழு கொண்க!- விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே!; விளையாடு ஆயமோடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய - யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடு சென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னை (யினது முற்றிய) விதையானது வேரூன்றி