பக்கம் எண் :


301


வேறுபிற அணங்குகளாலும் எய்தியதொன்றன்றுகண்டாய்; மணியின் தோன்றும் அம் மலை கிழவோன் இது செய்தனன் எனின் - வேறு யாவன் இதனைத் தோற்றுவித்தனன்கொல் என வினவின் 'நோக்குவோர்க்கு நீலமணி போலத் தோன்றாநிற்கும் அழகிய மலையையுடைய ஒருதோன்றலே இதனைச் செய்தனன்' என்று கூறுவானெனின்; படுவண்டு ஆர்க்கும் பைந்தர் மார்பின் நெடுவேட்கு ஏதம் உடைத்தோ - அதனாலே பொருந்திய வண்டுக ளாரவாரிக்கும் பசிய மாலையையணிந்த மார்பையுடைய அந் நெடிய முருகவேளுக்கு ஒரு குற்றமுமுண்டாகுமோ?; கூறுமதி - அதனை ஆராய்ந்து கூறிக்காண்; எ - று.

    (வி - ம்.)அன்னையை: உருபுமயக்கம். கண்ணி - போர்க்குச் சூடும் பூ. தெய்வமாதலின் கனவினுங்காட்ட அமையும். ஞாயிற்றின் வெம்மையாலே வறளாது மழைபெய்து நிறம்பெறுதலின் மணிபோலத் தோன்றும் என்றதாம்.

    இறைச்சி :- ஒன்றினேம் யாமென்று புகல்புக்க எம்மைக் கைவிட்ட அன்னோன் மலையாயிருந்தும், நீலமணிபோலத் தோன்றி விளங்காநிற்கும். இஃதென்ன வியப்போவெனப் பொருளின்புறத்தே தோன்றியதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) இதன்கண் முதல் துறைக்கு அன்னை களவொழுக்கத்தை அறியாதவளாய் வெறியாடமுயல்கின்றாள் அதனால் தலைவிக்கு வரும் ஏதம் பலவாம் ஆதலின் விரைந்து வரைந்து கொள்வாயாக என்பது குறிப்பெச்சமாகவும்,

    இரண்டாவது துறைக்குத் தோழி தலைவியை நோக்கி அன்னை வெறியெடுக்க முயல்கின்றாள்; நீ தானும் மறைபுலப்படுத்தும் கருத்துடையையல்லை; இனி யாம் வாளாவிருத்தல் கூடாது; மறைபுலப்படுத்தல் வேண்டும். நின் கருத்தியாது என்று வினவுதல் குறிப்பெச்சமாகக் கோடல் வேண்டும்.

(173)
  
174. . . . . . . . . . . . .
திணை :பாலை.

துறை : இது, வினைமுற்றி வந்தெய்திய காலத்து ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.

    (து - ம்.) என்பது, சென்று வினைமுடித்துவந்த தலைமகன் பரத்தையொடு முயங்கியதறிந்து நொந்துபுலந்த தலைவியைத் தோழி நெருங்கி 'நீ தலைவனோடிருந்தும் வருந்துவதென்னென்றாட்கு அவள் அறியாதார்க்கு அங்ஙனமே தோன்றுமாயினும் அவன் பரத்தைமார்பின்கண்ணே தன்னை மடுப்பானாயினான்; என்னை அன்பின்றி முயங்குவானாதலின், அவன் முயக்கந்தான் யாது பயனுடையதாகு'மென்று வருந்திக்கூறாநிற்பது.