பக்கம் எண் :


72


பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் இடையாமத் திருளிலே கள்வனைப் போல வந்துற்றான்; எ - று.

    (வி - ம்.)விரிச்சி - நிமித்தம். அறுவை - ஆடை. ஐயவி - வெண்கடுகு. குரை - அசையெனக்கொண்டு இலையான் வேய்ந்த பந்தரெனக் கூறினும் அமையும். ஐயவி-காவலாக அணிவது; அணங்குகள் அணங்காமைக்கு, மாறு; மூன்றனுருபின் பொருள்படுவதோரிடைச் சொல், கள்வன் போல என்றது சிறுமை பற்றிய நகையுவமம். மற்றுமிது கிழக்கிடு பொருளாக முதலொடு முதலேவந்த வினையுவமமுமாம். இனி் இப்பாட்டு முன்பு வருங்காலத்து வாராது மைந்தன் பிறந்ததனால் வந்தானெனத் தோழி கூறியதாக வுரைப்பினுமமையும்,

    மணி கடிமனை யிரட்டலென்றது தலைமகனது செல்வமிகுதி கூறியதாயிற்று. பரத்தையர் காணிற் பலர்கொள் பலகைபோலப் பற்றியீர்த்தலும் ஈர்ப்பரென அவர் காணாமை நள்ளிருளிற் கள்வன்போல வந்தனனென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய எள்ளல் பொருட்டாக வந்த நகை. பயன் -தலைமகனை இயற்பழித்தல்.

    (பெரு - ரை.) தலைவன் தம்மில்லத்தார்க்குப் பெரிதும் அஞ்சுபவன் ஆதலால் புதல்வன் பிறந்தமை கேட்டும் மகளிர் விரிச்சி நிற்கும் செவ்வியையும், செவிலியும் தலைவியும் உறங்கும் செவ்வியும் தேர்ந்து தன் காலடியோசையும் கேளாமைக்கு மணியிரட்டும்போது கள்வன் போல வந்தனன் எனப் பரத்தை தலைவனை இகழ்ந்தபடியாம்.

    இனி, இதனை ஆசிரியர் இளம்பூரணர் தோழி கூற்றாகக் கருதி, "சிறந்த புதல்வனை நேராது புலம்பினும்" (தொல்-கற்- 9) என்னும் துறைக்கு எடுத்துக்காட்டினர்.

(40)
  
    திணை : பாலை.

    துறை : இது, பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது.

    (து - ம்.) என்பது, தலைவனாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைவி வருந்தியபொழுது முன்னாள் நின் குறுநடைக் கூட்டம் விரும்பிப் பிரியாதிருந்தவர் இப்பொழுது பொருளீட்டுமாறு சேணிடைச்சென்று வருந்துவதானது, பின்னர் நின்னோடு இல்லறம் வழுவாது நடத்தற் பொருட்டன்றோவென இவள் விருந்தெதிர்கொள்ளும் உலகியலையெடுத்துக் காட்டித் தோழி வற்புறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 9) என்னும் நூற்பாவின்கண் 'மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்' என்புழி வரும் பிற என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
பைங்கண் யானைப் பரூஉத்தா ளுதைத்த 
    
வெண்புறக் களரி விடுநீ றாடிச் 
    
சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்